மூட்டுப் பிரச்சனைகளுக்கு ஒரே ஒரு ஊசி; மருத்துவத் துறையில் ஒரு புரட்சி!

மூட்டுப் பிரச்சனை

மூட்டுப் பிரச்சனைகளுக்கு, Stemcell அடங்கிய இரத்தத்தை, ஒரு ஊசி மூலம் எடுத்து, சிறப்பு மைய நீக்கியின் உதவியுடன் செறிவூட்டி, குறிப்பிட்ட விகிதத்தில் மூட்டுகளுக்கு இடையில் செலுத்தப்படுகிறது.

ன்றைய அறிவியல் மருத்துவத் துறையில், உலகமே வியக்கும் வகையில், புதிய புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து வருகின்றன. அப்படி இருந்தாலும், நமது உடல் சார்ந்த நோய்களுக்கு உரிய தீர்வு என்பது, தொடர்ந்து கேள்விக்குறியாகத் தான் இருந்து வருகிறது.

ஆனாலும், இத்தகைய கேள்விகளுக்கு மருத்துவத் துறையில் அவ்வப்போது ஆறுதலான, அற்புதமான கண்டுபிடிப்புகள் மூலம் பதில்கள் கிடைக்கத் தான் செய்கின்றன.

பொதுவாக, எலும்பு மருத்துவத்தை எடுத்துக் கொண்டால், மூட்டுப் பிரச்சனையாக இருந்தாலும் சரி, மற்ற எலும்பு பிரச்சனையாக இருந்தாலும் சரி, மருத்துவ மனைக்குச் சென்று பரிசோதித்து நோயின் தன்மையை அறிந்து கொள்கிறோம். இருந்தாலும், இறுதித் தீர்வு என்பது, அறுவைச் சிகிச்சையில் தான் முடிகிறது.

இந்த அறுவைச் சிகிச்சைக்காக நாம் அதிகச் சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. பணமும் அதிகமாகச் செலவாகிறது. மனமும் கவலையில் தோய்ந்து விடுகிறது.

+ இத்தகைய அவலங்களைப் போக்கும் விதமாக, இன்றைய எலும்பு மருத்துவத் துறையில், PRP என்னும் Platelet Rich Plasma Therrapy சிகிச்சை, நமக்கு ஒரு பொக்கிஷமாக, வரப்பிரசாதமாகக் கிடைத்து உள்ளது.

+ இந்த PRP சிகிச்சை என்பது, செறிவூட்டப்பட்ட நமது இரத்தத் தட்டுகளைக் (Platelet) கொண்டு, Stemcell அடங்கிய இரத்தத்தை, ஒரு ஊசி மூலம் எடுத்து, சிறப்பு மைய நீக்கியின் உதவியுடன் செறிவூட்டி, குறிப்பிட்ட விகிதத்தில் மூட்டுகளுக்கு இடையில் செலுத்தப்படுகிறது.

+ இது, இயற்கையாகக் குணமாகும் திறன்களைத் தூண்டி, மென்மையான திசுக் காயங்கள் மற்றும் மூட்டுவலி, கால்வலி, கணுக்கால் வலி, விளையாடும் போது எதிர்பாராமல் ஏற்படும் காயங்கள், தோள்பட்டை வலி, கைவலி, இடுப்பு வலி, முதுகுத்தண்டு வலி போன்ற வலிகளைப் போக்கி, நிறைவான நிவாரணம் தருகிறது.

+ இந்த PRP சிகிச்சையைப் போல, Goldic Particle Induced Stemcell சிகிச்சையும் சிறந்து விளங்குகிறது. பழங்கால மருத்துவத்தில் ஒருசில ஆரோக்கியக் குறைகளுக்கு மருந்தாக, தங்கத்தைப் பயன்படுத்தினர். அதற்கு, தங்க பஸ்பம் என்று பெயரிட்டனர்.

+ அதைப் போலத் தான், இந்த உலகத்தில் உள்ள NANO மூலப்பொருளை வைத்து, எலும்புக்கு உரிய, உயரிய சிகிச்சையைச் செய்கிறார்கள்.

+ இந்தப் பாரம்பரிய முறையிலான சிகிச்சை நல்ல பலனைக் கொடுக்கிறது. நமது உடலில் அதிக எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது.

+ இந்த PRP Goldic NANO சிகிச்சை, மருத்துவ உலகில், பெரும்புரட்சி என்றும், வாராது வந்த வரப்பிரசாதம் என்றும் பெருமையுடன் கூறலாம்.

+ இத்தகைய சிறப்புச் சிகிச்சை, அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி, பிரிட்டன், மெக்சிகோ போன்ற நாடுகளில், மிகவும் புகழ் பெற்ற சிகிச்சையாக இருந்து வருகிறது.

+ பொதுவாக, நெல்லிக்கனியை, ஏழைகளின் ஆப்பிள் என்று சொல்வதைப் போல, இந்த PRP சிகிச்சை, இந்திய நாட்டின் ஏழை மக்களுக்கு ஏற்ற எளிய சிகிச்சையாக இருக்கிறது.

+ இந்தச் சிகிச்சை 45 நிமிடங்களில் செய்து முடிக்கக் கூடியது. மயக்க மருந்து தேவையில்லாதது, பக்க விளைவு இல்லாதது.

+ அலுவலகம் செல்வோர், வீட்டுப் பணியில் இருப்போர், இந்தச் சிகிச்சை முடிந்ததும், அலுவலகத்துக்கும் வீட்டுக்கும் உடனே செல்லலாம். மருத்துவ மனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை.

+ இந்த PRP சிகிச்சையை, எலும்பு பிரச்சனை முற்றிய நிலையில் உள்ளவர்க்குச் செய்ய முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளில் புகழ் பெற்ற இந்தச் சிகிச்சையை, நம் இந்திய நாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்னும் முனைப்பும், முன்னெடுப்பும் செய்தவர், சென்னை, ஆழ்வார் பேட்டையில் உள்ள RIO மருத்துவ மனையின் தலைவரும், எலும்பு முறிவு, மூட்டு மாற்று மற்றும் PRP சிகிச்சை மருத்துவ நிபுணருமான, திரு.M.லட்சுமிநாதன் M.S.Ortho, Mch ortho, D ORTHO, Phd அவர்கள்.

மூட்டுப் பிரச்சனை
M.லட்சுமிநாதன் M.S.Ortho, Mch ortho, D ORTHO, Phd

+ தரமான இந்தச் சிகிச்சையை இந்திய மக்களுக்கு வழங்க வேண்டும் என்று தீர்மானித்து, வெளிநாடுகளுக்குச் சென்று, சிகிச்சை நுணுக்க முறைகளைக் கற்று வந்து, இங்கே எளிமையான முறையில் நமக்கு வழங்கி வருகிறார்.

+ இவரது தலைமையில் இயங்கும், சென்னை, ஆழ்வார் பேட்டையில் உள்ள RIO மருத்துவ மனையில், அனைத்து மூட்டுப் பிரச்சனைகளுக்கும் அறுவைச் சிகிச்சை உட்பட, பலவகை சிகிச்சைகள் சிறப்பாக அளிக்கப்பட்டு வருகின்றன.

+ RIO மருத்துவமனை முழுக் கட்டமைப்பைக் கொண்ட, சிறந்த மருத்துவ மனையாகத் திகழ்கிறது. குறிப்பாக, PRP சிகிச்சைக்கான தலைசிறந்த மருத்துவ மனையாகவும் விளங்குகிறது.

மூட்டுப் பிரச்சனை

+ தூய்மை, நேர்மை, அர்ப்பணிப்புத் தன்மை மிக்க இந்த மருத்துவமனை, எளிய மக்களின் ஆலயமாகத் திகழ்கிறது.

+ ஆகவே, காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வீர் என்னும் தமிழ் மொழிக்கு ஏற்பவும், Prevention is better than cure என்பதற்கு ஏற்பவும், மூட்டு வலிக்கும் போதே, முழுக் கவனத்துடன் இருக்க வேண்டும்.

+ சரியான நேரத்தில் முன்கூட்டியே தடுப்புச் சிகிச்சையை எடுத்துக் கொண்டால், நாம் பெரும் பாதிப்பில் இருந்து மீண்டு எழலாம், மீட்டுருவாக்கம் பெறலாம்.

விழிப்புடன் இருப்போம், நலமுடன் வாழ்வோம்!

மேலும் விவரங்களுக்கு:
RIO மருத்துவமனை,
252ஏ, டி.டி.கே.சாலை,
ஆழ்வார்பேட்டை,
சென்னை – 600 018.
செல்பேசி: 98844 88288
Mail ID: dr.naathan@gmail.com


விளம்பரதாரர் செய்தி

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!