புஷ்கரம் கல்லூரியில் வேளாண் திருவிழா!

புஷ்கரம் pushkaram

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் அமைந்துள்ள புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியில், 29.03.2024 அன்று, மாபெரும் வேளாண் திருவிழா நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை – உழவர் நலத்துறை, புதுக்கோட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் இந்த விழாவில், வேலை வாய்ப்பு முகாம், விவசாயிகள் கருத்தரங்கு, பயிர் மருத்துவம் மற்றும் மண் பரிசோதனை முகாம் ஆகிய நிகழ்வுகள் இடம் பெற உள்ளன.

இந்த விழாவில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர், சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

மேலும், விவசாய அதிகாரிகள், விவசாயச் சங்க நிர்வாகிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவன நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், மகளிர் குழுவினர் மற்றும் விவசாயப் பெருமக்கள் திரளாகக் கலந்து கொள்ள உள்ளனர்.


மு.உமாபதி

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!