கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கனமழை Heavy rain Meteorological Department warning

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று (செப்.,08) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைக் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் ஆகிய 18 மாவட்டங்களில் இன்று (செப்.08) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளைக்கு, நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரம் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!