நுண்ணுயிர் இலைக்கருகல் நோய் விரட்டி!

Bacterial leaf blight

 

“ஏண்ணே… பயிருல இலைகள் கருகிக் கருகி இருக்குண்ணே… இதுக்கு நம்ம இயற்கை முறையில என்ன செஞ்சா கட்டுப்படுத்தலாம்?..’’

“பாக்டீரியாக்கள் என்று சொல்லப்படும் நுண்ணுயிரிகள் பயிர்களைத் தாக்கி இலைக்கருகல் நோயை உண்டாக்கும்… இவற்றை இயற்கை முறையிலேயே கட்டுப்படுத்தலாம்…’’

“இதுக்கு என்னென்ன பொருள்கள் வேணும்ண்ணே?…’’

“நுண்ணுயிர் இலைக்கருகல்  நோயைக் கட்டுப்படுத்த, சோற்றுக் கற்றாழை 3-5 கிலோ, இஞ்சி 200 கிராம், புதினா அல்லது சவுக்கு அல்லது உன்னித்தழை 3-5 கிலோ, மஞ்சள் தூள் 100 கிராம், சூடோமோனாஸ் புளோரோசன்ஸ் 500 கிராம் தேவைப்படும்…’’

“சரிண்ணே… இந்தப் பொருள்களை வச்சு இந்த மூலிகை மருந்தைத் தயாரிக்கிறது எப்பிடிண்ணே?…’’

“நான் சொல்லிய தழைகள் மூழ்கும் அளவில் நீரை ஊற்றி நன்கு வேக வைக்க வேண்டும்… பிறகு, இதை ஆற வைத்துச் சாற்றை வடிகட்டி எடுத்து, அதனுடன் மஞ்சள் தூளையும், சூடோமோனாசையும் கலந்தால் நுண்ணுயிர் இலைக்கருகல் நோய் விரட்டித் தயாராகி விடும்…’’

“சரிண்ணே… இதை எப்பிடித் தெளிக்கிறதுன்னு சொல்லுண்ணே…’’

“இதைப் பத்து லிட்டர் நீருக்கு ஒரு லிட்டர் கரைசல் என்னும் அளவில் கலந்து… கைத்தெளிப்பான் அல்லது விசைத் தெளிப்பான் மூலம் பயிர்களில் தெளிக்கலாம்… இதனால், இலைக்கருகல் நோய் கட்டுப்படும்… மிகுந்த செலவில்லாத இடுபொருள்… சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பை உண்டாக்காது… நஞ்சில்லா உணவுப் பொருள்கள் கிடைக்கும்…’’

“ரொம்ப நன்றிண்ணே…’’


பசுமை

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!