கோபிச்செட்டிப் பாளையத்தில் நடந்து முடிந்த விவசாயக் கண்காட்சி!

கோபி IMG 1516photo scaled

ச்சை பூமி வேளாண் மாத இதழ், விவசாயிகள் பயனடையும் வகையில், தமிழகம் முழுவதும், சிறந்த முறையில் விவசாயக் கண்காட்சியை நடத்தி வருகிறது. இதன் ஒன்பதாம் கண்காட்சி, ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப் பாளையத்தில் உள்ள முத்து மஹாலில், 2023 ஏப்ரல் மாதம் 07, 08, 09, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெற்றது.

+ இந்தக் கண்காட்சியில், நாட்டு விதைகள் முதல், நவீன விதைகள் வரை நிறைந்த அரங்குகள் இடம் பெற்று இருந்தன.

+ மா, கொய்யா, பலா, மாதுளை, எலுமிச்சை, நெல்லி போன்ற பழமரக் கன்றுகள், தேக்கு, குமிழ் தேக்கு, மகாகனி, சந்தனம் போன்ற பணமரக் கன்றுகள் அடங்கிய அரங்குகள் இடம் பெற்று இருந்தன.

+ மண் காப்போம் என்னும் குரலுடன், தமிழகம் முழுவதும் மர விவசாயத்தை முன்னெடுத்து வரும் ஈஷா நிறுவனம் சார்பில் மிகக் குறைந்த விலையில், மூன்று ரூபாய் வீதம் கன்றுகள் வழங்கப்பட்டன.

+ மண்ணுக்கு வளம் சேர்த்து மகசூலைப் பெருக்கும் இயற்கை உரங்கள் நிறைந்த அரங்குகள் இடம் பெற்று இருந்தன.

+ கருக்கரிவாள், செடி, கொடி கவாத்து அரிவாள், மருந்து தெளிப்பான், களைக்கருவி என, கையால் பயன்படுத்தும் கருவிகள் முதல், ரொட்டோவேட்டர், டிராக்டர், பண்ணைக் கழிவுகளை உரமாக்க உதவும் இயந்திரங்கள் வரை நிறைந்த அரங்குகள் இடம் பெற்று இருந்தன.

+ தமிழக அரசின் வேளாண் திட்டங்களையும், உத்திகளையும் அறிந்து கொள்ளும் வகையில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை, பட்டுவளர்ச்சித் துறை, கால்நடைப் பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, பால்வளத்துறை ஆகியவற்றின் சார்பிலான அரங்குகள் அங்கம் வகித்தன.

+ எளிமையானதும், பக்க விளைவும் இல்லாத தமிழ் மருத்துவ மருந்துகள் மற்றும் ஆலோசனைகள் பெறுவதற்கான அரங்குகள் இங்கே இடம் பெற்று இருந்தன.

+ சுற்றுச்சூழல் மேலாண்மையை வலியுறுத்தும் அரங்குகளும் இந்தக் கண்காட்சியில் இடம் பிடித்து இருந்தன.

+ விவசாயிகள் மட்டுமின்றி, ஏனைய சிறுவர் சிறுமியர், இல்லத்தரசிகள் என, பொது மக்களும் பார்த்துப் பயனடையும் வகையிலான அரங்குகள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்கள் நிறைந்த அரங்குகள் இடம் பெற்று இருந்தன.

+ மொத்தத்தில், பார்க்க வந்த அனைவருக்கும் மனநிறைவைத் தரும் வகையில் இந்தக் கண்காட்சி அமைந்திருந்தது.


பச்சை பூமி

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!